கடகம் - வார பலன்கள்
எந்த செயலிலும் முன்நிற்கும் கடக ராசி அன்பர்களே!
வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு 12.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவீர்கள். புதிய நபர் வருகையால் அவசர காரியம் ஒன்றை செய்ய நேரிடும். பணிகளில் கவனம் இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காவீர்கள்.
சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர் வரவினால் எதிர்பாராத வளர்ச்சியும், பணவரவும் வந்துசேரும். கூட்டுத்தொழிலில் எதிர்பாராத போட்டிகள் உருவாகி, வியாபாரத்தை பாதிக்கலாம். சாமர்த்தியத்தால் அவைகளை வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை பெண்கள் சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். சிறிய கடன்கள் தலைகாட்டும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கு பெற வெளியூர் பயணப்படுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.