கடகம் - வார பலன்கள்
காரியத்தில் முனைப்பாக செயல்படும் கடக ராசி அன்பர்களே!
புத்திசாலித்தனமாக செயல்பட்டு, காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். கோபத்தைக் குறைத்து, பொறுமை, நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கொடுக்கல் வாங்கலில் சுமுக நிலை ஏற்படும். தள்ளிவைத்த பணி ஒன்றை உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும்.
அலுவலகத்தில் பணியாற்றுவோர் சிலருக்கு, பதவி உயர்வோடு வெளியூர் மாற்றம் கிடைக்கக்கூடும். சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நலம். சொந்தத் தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய அதிகம் சிரமப்படுவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் இருந்தாலும் அலைச்சலும் மிகுதியாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம். சுபகாரியங்கள் சிறிய தடைக்குப் பின்னர் நடைபெறும். பங்குச்சந்தை லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.