கடகம் - வார பலன்கள்
ஆற்றல்மிகு எழுத்தாற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை மாலை 6.23 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு தடை தோன்றும். தடைபட்ட காரியங்கள் வெற்றி பெற, தகுந்த நபர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்துசேரும். சக ஊழியரிடம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கலாம். குடும்ப அங்கத்தினர் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.