மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
தினத்தந்தி 7 July 2023 12:45 AM IST (Updated: 7 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

07-07-2023 முதல் 13-7-2023 வரை

கனிவால் பிறரைக் கவரும் மகர ராசி அன்பர்களே!

கடிதப் போக்குவரத்து சாதகமாக இருக்கும். உங்கள் மனதுக்கேற்றபடி நல்ல பலன்களை அளித்தாலும், சில காரியங்களில் தளர்வுகளும் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்தில் செல்வாக்கு கூடும். சக நண்பர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும். உதவியாளர்களில் தொழில் நுட்பம் அறிந்தவர்களை பணியமர்த்திக் கொள்ள திட்டமிடுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பணியாளர்களை அவ்வப்போது கண்காணித்து, அவர்களுக்குள் ஏற்படவிருந்த குழப்பத்தை நிவர்த்தி செய்வார்கள். குடும்பத்தில் சீரான போக்கு இருக்கும். நெருங்கிய உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். கலைத்துறையினர் புகழும், பொருளும் பெறுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.


Next Story