மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:08 AM IST (Updated: 18 Aug 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

செயல்களில் ஊக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகள் பலவற்றில் வெற்றிகரமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும், உங்கள் பணிகளில் ஆதரவாக இருப்பார்கள். எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் பல சலுகைகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சொந்தத் தொழிலில், வேலைகள் அவசரப்படுத்தும். அதே நேரம் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தருவதாக அமையும். புதிய தொழில் தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் பேசி முடிவெடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் ஒப்பந்தங்களைப் பெற்று புகழடைவர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்தவாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.


Next Story