மகரம் - வார பலன்கள்
நீதிநெறியில் நம்பிக்கை கொண்ட மகர ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை பகல் 1.05 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு சிறு தடைகளை சமாளிக்க நேரிடும். மனதில் இனம் புரியாத குழப்பமும், செயல்களில் தடுமாற்றமும் காணப்படும். உத்தியோகஸ்தர்கள், பணிகளில் கவனமாகவும், நிதானமாகவும் செயலாற்றுவது நல்லது. சகப் பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடுங்கள்.
சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பணியாளர்களிடம் கனிவு காட்டாவிட்டால், வியாபாரம் தடைபடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். கணவன் -மனைவிக்குள் அனுசரணை அவசியம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் போதிய வருமானம் இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.