மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 Oct 2023 7:54 PM GMT (Updated: 12 Oct 2023 7:55 PM GMT)

13-10-2023 முதல் 19-10-2023 வரை

பிறரிடம் இனிமையாக பழகும் மகர ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த செயல்களில் கவனமாக இல்லாவிட்டால் முன்னேற்றம் தடைபடும். சில செயல்களில் முக்கிய நண்பர்களின் உதவி கிடைக்காமல் போகலாம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்தாவிட்டால், உயரதிகாரிகளின் பார்வையில் தென்படும் குறைகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கூட்டு வியாபாரத்தில் லாபம் வழக்கம் போல காணப்படும். பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கூட்டாளி களுடன் கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவார்கள். கலைஞர்கள் வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story