மகரம் - வார பலன்கள்
உத்திராடம் 2,3,4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதங்கள்
தான தர்மங்களில் பற்று கொண்ட மகர ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளில் நிதானமான போக்கு அவசியம். வரவுகள் தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தமும், பணமும் கிடைத்து மகிழ்ச்சி அடையலாம். வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் பிரபல நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற முன்னேற்பாடுகளை தொடங்குவீர்கள். இல்லத்தில் தோன்றும் சிறுசிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள்.
பரிகாரம்:- நவக்கிரக சன்னிதியில் உள்ள சுக்ரனுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் செல்வ வளம் சேரும்.