மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:54 PM GMT (Updated: 2022-11-25T01:24:53+05:30)

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!

சில விஷயங்கள் சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வோ, எதிர்பார்த்த இடமாற்றமோ கூட ஏற்படலாம். ஆனால் அதை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மனதில் சிறிய குழப்பம் உண்டாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய சிந்தனையை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பணப் பொறுப்பில் இருப்பவர்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

அரசியலில் உள்ளவர்கள் கடுமையான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். பழைய கடன் பாக்கி மற்றும் கடந்த கால பிரச்சினைகள் தலைதூக்கலாம். எந்த ஒரு வார்த்தையையும் யோசித்து பேசுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்:- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் நீங்கும்.


Next Story