மகரம் - வார பலன்கள்
எல்லோருடனும் நட்புப் பாராட்டி புகழடையும் மகர ராசி அன்பர்களே!
சிறுசிறு தாமதங்கள் ஏற்படும் என்றாலும், உங்கள் செயல்களில் எதிர்பார்க்கும் வெற்றிக்கு குறைவிருக்காது. முக்கியமானப் பணிகளை நிறைவேற்ற புகழ்பெற்ற மனிதர்களை சந்திப்பீர்கள். நல்லவை உங்களை தேடி வரக்கூடிய காலம் இது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறும் வகையில் வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், சக நண்பர்களின் ஒத்துழைப்பும் மனதிற்கு உற்சாகம் தரும். சொந்தத்தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் திறமையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக்கூடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளுக்காக சுறுசுறுப்பாக இயங்குவர். பங்குச்சந்தையில் அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்:- வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள்.