மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 2:03 AM IST (Updated: 9 Dec 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த செயல்பாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சகப் பணியாளர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் பெரிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள். எனவே தயக்கமின்றி முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொட்ட துறைகளில் எல்லாம் லாபம் ஏற்படும். கணக்கு வழக்குகளை பார்ப்பவரை கண்காணிப்பது அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்கள், விரும்பி வந்து இணைவார்கள். சுப காரியம் நடந்தேறும்.

பரிகாரம்:- சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால் இன்பம் கூடும்.


Next Story