மகரம் - வார பலன்கள்
அஞ்சாத நெஞ்சம் கொண்ட மகர ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை பகல் 11.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, வெளியூர் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கலாம். உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசர பணி ஒன்றை செய்து பாராட்டு பெறுவீர்கள். சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் சேர்க்கை உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பம் சீராக நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை காணப்படும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு தோன்றி மறையும். பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவீர்கள்.
பரிகாரம்:- சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் ஒளி வீசும் வாழ்வு கிட்டும்.