மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Dec 2022 1:24 AM IST (Updated: 23 Dec 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான மகர ராசி அன்பர்களே!

தொல்லைகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும் வாரம் இது. மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதில் தாமதம் உண்டாகும்.

தொழில் செய்பவர்களுக்கு, தங்கள் துறையின் வளர்ச்சிக்கு பல வகையிலும் உதவிகள் வந்துசேரும். வருவாயும் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரம் சுமாராகவே நடந்து வரும். கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

அரசியல் துறையில் இருப்பவர்கள், நிதானமாகவே நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு எல்லா வகையிலும் சுமுகமான பலன்களே நடைபெறும். கணவன் - மனைவி இடையே கலகலப்பான சூழ்நிலை நிலவும். எதிரிகள் வலிமையுடன் இருப்பார்கள். கவனமாக செயல்பட்டால் பாதிப்பு வராது.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கும்.


Next Story