மகரம் - வார பலன்கள்
30.12.2022 முதல் 5.1.2023 வரை
மனோதத்துவத்தில் சிறந்து விளங்கும் மகர ராசி அன்பர்களே!
வர வேண்டிய தொகைகள், சிறு தாமதத்திற்கு பின்னர் வந்துசேரும். அலைச்சல் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் தொகை வந்துசேரும். தள்ளி வைத்த வேலையை உடனே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் ரசனை அறிந்து செயல்படுவது நல்லது. பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் ஏற்படலாம். கூட்டாளிகளின் பங்கை கொடுப்பது பற்றி ஆலோசிப்பீர்கள்.
குடும்பத்தில் கடன் பிரச்சினை தீரும். கலைஞர்கள், தங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தருவதாக அமையும்.
பரிகாரம்:- திங்கட்கிழமை அன்று அம்பிகைக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.