மகரம் - வார பலன்கள்
வெற்றிக்கு முயற்சி செய்யும் மகர ராசி அன்பர்களே!
சிறப்பாக செயல்பட்டாலும் சில காரியங்களில் மட்டுமே முன்னேற்றமான பலன்களை பெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகப் பொறுப்புகளால் அவதிக்குள்ளாக நேரலாம். எதிர்பார்க்கும் கடன் தொகை கைக்கு கிடைக்க சிறிது தாமதமாகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளில் கவனமாக இருந்தாலும், சிறு சிறு தவறுகள் ஏற்படத்தான் செய்யும். செய்து கொடுத்த பணிகளில் உள்ள குறைகளை சரிப்படுத்திக் கொடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு உதவும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலைகாட்டும். அவற்றை பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். கலைஞர்களுக்கு, முயற்சிகள் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும் எதிர்பார்க்கும் வருமானம் வராது. பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை, செந்தாமரை மலர் சூட்டி வணங்கினால் சகல செல்வங்களும் தேடி வரும்.