மகரம் - வார பலன்கள்
அரிய செயல்களையும் எளிதில் செய்யும் மகர ராசி அன்பர்களே!
முன்னேற்றமான போக்குடன் சில செயல்கள் காணப்பட்டாலும், ஒரு சில காரியங்களில் தேக்க நிலை இருக்கக்கூடும். கைக்கு வரவேண்டிய பணவரவு சிறிது தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், செய்யும் வேலைகளில் சிரமங்கள் இருந்தாலும், உயரதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதாயம் குறையாது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். தொழிலில் போட்டியாளர்களைச் சமாளிக்கக் கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லை உருவாகும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் பெற, தினசரிகளில் வரும் அன்றாட நிலவரங்களை கவனியுங்கள்.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு, சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபாடு செய்வது நற்பலன்களை தரும்.