மகரம் - வார பலன்கள்

அச்சமில்லாத உள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!
வரவு இருந்தாலும், செலவு அதி கரிக்கும். தளர்ச்சி அடைந்த செயல்களிலும் வெற்றி பெற முயல்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் கவனம் செலுத்தாவிட்டால், உயரதிகாரிகளின் முன் தலைகுனிய வேண்டியதிருக்கும்.
சொந்தத்தொழிலில் வேலைகள் அதிகமிருந்தாலும், வரவு தள்ளிப்போகலாம். வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் ஏற்படலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள், தொழில் ரீதியான முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களை அவ்வப்போது கவனித்து அறிவுரை வழங்குவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள், சகக்கலைஞர் இல்லத்து நிகழ்ச்சிக்காகப் பண உதவி செய்யும் சந்தர்ப்பம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெண்களே சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவார்கள்.
பரிகாரம்:- சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய்தீபமிட்டு வழிபட்டால் சகல சம்பத்துகளும் உண்டாகும்.






