மகரம் - வார பலன்கள்

சிறிய செயலையும் திறம்படச் செய்யும் மகர ராசி அன்பர்களே!
பூமி சம்பந்தப்பட்ட நீண்ட கால பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும். அடமானம் வைத்த பூமியை மீட்பது, பழைய வீடுகளை இடித்து புதுப்பிப்பது போன்ற காரியங்களைச் செய்வீர்கள். குழந்தைப்பேறு இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது.
ஒரு சிலருக்கு நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த வழக்குகள், உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் அமைதியான குணத்திற்கு ஏற்ப நன்மையாக சில காரியங்கள் நடைபெறும். அதனால் நண்பர்களாலும், உறவினர்களாலும் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாராத வகையில் திருமணம் கைகூடி வரும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள், கடுமையான குளிர் பிரதேசங்களுக்கு மாறுதலாகிச் செல்லக்கூடும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.






