மகரம் - வார பலன்கள்
அனைவரையும் கவரும்படி பேசும் மகர ராசி அன்பர்களே!
முயற்சியால் முன்னேற்றம் காணும் வாரம் இது. அயராது உழைப்பதால் கூடுதல் வருமானம் வந்து சேர்ந்திடும். நீண்ட காலமாக பார்க்க நினைத்த நண்பரை, எதிர்பாராத விதமாக வழியில் சந்திப்பீர்கள். கடிதம் ஒன்றின் வரவால் பயணம் ஏற்படும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். விடுமுறையில் சென்ற சகப் பணியாளரின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வேலை ஒன்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாடிக்கையாளரின் பாராட்டு மழையில் நனைவீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்றாக நடைபெறும். குடும்ப வாழ்வில் சிறு சிறு குறைகள் இருந்த போதிலும், பெண்களின் திறமையால் அவை மறைந்து போகும். கலைஞர்களுக்கு புதிய பணி கிடைத்து, ஊக்கம் அளிக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் பண வரவு உண்டாகும்.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு, நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள்.