மகரம் - வார பலன்கள்
வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை
திட்டமிட்டு செயலாற்றும் மகர ராசி அன்பர்களே!
திங்கள், செவ்வாய் மற்றும் புதன் காலை 9.42 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். அதை சவாலாக ஏற்று பணியாற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் திட்டமிடல் அவசியம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அவசரமாக செய்த பணியொன்றில் ஏற்பட்ட தவறு காரணமாக, சிறு மனக்கலக்கம் ஏற்படலாம்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். பங்குச் சந்தையில் திட்டமிட்டு முதலீடு செய்வது அதிக லாபம் பெற வழிவகுக்கும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்க கடுமையாக பணியாற்றுவீர்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கினாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். பெண்களின் சேமிப்பு செலவழியும். சிறு சலசலப்புகளுக்கு இடையே நல்ல காரியம் நடைபெறும்.
பரிகாரம்:- நவக்கிரக சன்னிதியில் உள்ள சந்திரனுக்கு வெண் மலர் சூட்டி வழிபடுவது மனசாந்தியை அளிக்கும்.