மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 March 2023 1:27 AM IST (Updated: 24 March 2023 1:28 AM IST)
t-max-icont-min-icon

உறுதியான மனதோடு காரியங்களை செய்யும் மகர ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் அதற்கான முயற்சியை தொடர்ந்து வந்தால், விரைவில் வெற்றி கிடைக்கலாம். பணப்புழக்கம் குறையும். பணத் தேவைக்காக நண்பர்களிடம் உதவி கேட்டாலும், அதற்கு பலன் இருக்காது.

வியாபாரம் லாபகரமாகவே இருந்து வரும். என்றாலும், அரசு வழியில் சில சங்கடங்கள் வந்து சேரும். கணக்குகளை கவனமாக வைத்திருப்பது அவசியம். தொழிற்பிரிவினர் படிப்படியாக வளர்ச்சி நிலையைக் காண்பீர்கள். வியாபாரத்தில் குறைந்தபட்ச லாபம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. குடும்பத்தில் சுமுகமான நிலையே காணப்படும். சகோதர வழியில் செலவினங்கள் அதிகரிக்கலாம். பயணத்தின்போது மிகுந்த கவனம் தேவை. கடன் கொடுப்பதையும், ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:- இந்த வாரம் தினமும் சண்முகக் கவசம் படித்து முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள்.


Next Story