மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 31 March 2023 1:52 AM IST (Updated: 31 March 2023 1:53 AM IST)
t-max-icont-min-icon

உழைப்புக்கு அஞ்சாத மகர ராசி அன்பர்களே!

ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை மாலை 4.56 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்கள் உங்கள் எண்ணப்படி நடைபெறாமல் போகக்கூடும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். பாதியில் நிறுத்தியிருந்த வேலையை, தொடர்ந்து முடித்துப் பாராட்டுப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் அவசியம் கருதி, பணிகளை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் உங்களின் ஓய்வு நேரம் குறையும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் முதலீடுகளை அதிகப்படுத்த முற்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெண்களே சமாளித்துவிடுவர். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.


Next Story