மகரம் - வார பலன்கள்
கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!
தேவையற்ற சர்ச்சைகளிலிருந்து ஒதுங்கி இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் சிலருக்குப் பொறுப்புள்ள பதவிகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில அவசியமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் உடனே கிடைப்பதால் தொல்லைகளைப் பொருட்படுத்த மாட்டீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. பணப்பொறுப்பில் உள்ளவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை சுலபமாகச் சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கான பொறுப்பு வரலாம். கலைஞர்கள், பிரபல நிறுவன ஒப்பந்தங்களைப் பெறுவா். சிலருக்கு வெளியூர் பயணங்கள் அமையும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சுதர்சனப் பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.