மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 May 2023 1:28 AM IST (Updated: 12 May 2023 1:28 AM IST)
t-max-icont-min-icon

தருமம் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டும் மகர ராசி அன்பர்களே!

காரியங்களில் அதிக முயற்சியோடு ஈடுபட்டு முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள். சில காரியங்களில் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை அடைவதற்கு, தக்கவர்களின் உதவியை நாடுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படலாம். கொடுக்கல் - வாங்கலில் சக்திக்கு மீறி செயல்படுவது பாதிப்பை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், கவனமாக நடந்து கொள்வது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பணவரவு அதிகமாகும். குடும்பத்தில் கணவன், மனைவி அன்பு சீராக இருக்கும். பணத்தட்டுப்பாடு காரணமாகச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பங்குச்சந்தையில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வணங்குங்கள்.


Next Story