மகரம் - வார பலன்கள்
எதிர்ப்புகளை முறியடிக்கும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் பணிகளின் மூலம் வரவு வந்தாலும், அதற்கு நிகரான செலவுகளும் இருக்கும். நிலம் அல்லது வீடு விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கடிதப் போக்குவரத்து நிம்மதியை தரும். உத்தியோகஸ்தர்களில் சிலர் செய்த தவறினால், அலுவலகத்தில் சலசலப்பு உருவாகும். உயரதிகாரிகளின் அனுசரிப்பால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழில் நன்றாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். புதிய கிளைகளை இப்போது தொடங்க வேண்டாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பெண்களுக்கு சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற பொறுமையாக இருப்பது அவசியம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.