மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 2:28 AM IST (Updated: 23 Jun 2023 2:28 AM IST)
t-max-icont-min-icon

சுறுசுறுப்பாக காரியங்களை சாதிக்கும் மகர ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் ஞாயிறு பகல் 3.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வீண் விவாதங்களைத் தவிர்த்து அனைவரிடமும் சுமுகமாக நடந்து வந்தால், பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலைகள் மேம்பட புதிய வரவுகள் வந்து சேரலாம். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இருந்தாலும் சிறுசிறு பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சிரமத்தை சந்திப்பீர்கள். கூட்டுத் தொழிலில் வியாபாரம் நன்றாக இருந்தாலும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்துபோகும். பழைய கடன்கள் தொல்லை அளித்தாலும் பாதிப்பு வராது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அதிக முயற்சியின் பேரில் கிடைத்தாலும், எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story