மிதுனம் - வார பலன்கள்
எந்த செயலையும் திறம்படச் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால், மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள், திருப்புமுனையான வாழ்க்கை அமைய கடுமையாக உழைப்பீர்கள். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவர். கூட்டுத்தொழிலில் உள்ள மறைமுக எதிரிகளை சமாளிக்க போராடுவீர்கள். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களை போடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களுக்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். கலைஞர்களுக்கு சிறிய முயற்சிக்கு பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் இருக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுங்கள்.