மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Aug 2023 7:36 PM GMT (Updated: 24 Aug 2023 7:37 PM GMT)

உதவி செய்யும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

திங்கள் காலை 8.20 மணி முதல் புதன் காலை 10.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்த்த பண உதவிகள் சற்று தள்ளிப் போகலாம். இருந்தாலும் எதிர்காலத்தில் ஏற்றமிகு வாழ்க்கை அமையும்படி பார்த்துக் கொள்வீர்கள். சகோதர வழியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்துசேரும். தள்ளிவைத்த வேலையை உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும்.

சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் மூலம் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். கடன் தொல்லை படிப்படியாக குறையும். கலைஞர்கள், சகக் கலைஞர்களின் ஒத்துழைப்பால் பணியில் மகிழ்வுடன் ஈடுபடுவர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.


Next Story
  • chat