மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:50 PM GMT (Updated: 14 Sep 2023 7:50 PM GMT)

கவலையை மறைத்து சிரிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

புத்திசாலித்தனமான செயல்களில் தீவிர முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். வரவேண்டிய பணம் சிறிது தாமதித்து கைக்குக் கிடைத்தாலும், நீங்கள் கொடுக்க வேண்டிய பாக்கிகள் அவசரப்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணிகளைச் செய்து கொடுத்து மகிழச் செய்வார்கள். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபார ஸ்தலத்தை விரிவாக்கவும், புதிய கிளைகள் தொடங்கவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெற பெரியவர்களோடு கலந்து தீர்மானிப்பீர்கள். கலைஞர்கள் பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஏற்படும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபடுங்கள்.


Next Story
  • chat