மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 Sep 2023 7:59 PM GMT (Updated: 21 Sep 2023 8:00 PM GMT)

எதிலும் குறைவின்றி செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணி முதல் செவ்வாய்க்கிழமை மாலை 6.51 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பாராத செலவுகள் முன்னே நிற்கும். எதையும் நிதானித்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புப் பயன்தரும்.

சொந்தத் தொழிலில் அதிக வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் அதிக லாபம் தருவதாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கி வியாபாரத்தைப் பெருக்க, பங்குதாரர்களோடு பேசி முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் மகன் அல்லது மகளால் பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பணவரவுகள் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணப் பற்றாக்குறை நீங்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story
  • chat