மிதுனம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
வலிமை மிகுந்த நெஞ்சம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
மற்றவர்களுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் உதவியால் பல முன்னேற்றமான செயல்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோப பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் காணப்படும். பணியாளர்களை அடிக்கடி கண்காணித்து அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்றுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை அவ்வப்போது சரி செய்து விடுவீர்கள். சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். சுபகாரிய பேச்சு முடிவாகும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினை பெற்று பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் போதுமான லாபம் கிடைக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.