மிதுனம் - வார பலன்கள்
தந்தை வழி உறவுகளால் சிறு மனவேறுபாடு ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பழைய நண்பரின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் வேலைகளில் கவனமும் நிதானமும் அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளரின் திருப்தியைச் சம்பாதிக்க அதிக கவனம் தேவைப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் பலன் பெற முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் பிரச்சினைகள் எழக்கூடும். சிறிய கடன்களை சாமர்த்தியமாக அடைத்து விடுவீர்கள். சுபகாரியங்கள் தள்ளிப்போகலாம். கலைத்துறையைச் சேர்ந்தவர் புதிய வாய்ப்புகளைப்பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஸ்ரீதுர்க்கா தேவிக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது பலன் அளிக்கும்.
Next Story