மிதுனம் - வார பலன்கள்
மிருகசீர்ஷம் 3, 4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்
உறுதியான மனம் படைத்த மிதுன ராசி அன்பர்களே!
பரபரப்புடன் செய்த காரியங்களில் ஆதாயம் தள்ளிப்போகும். அதிக செலவால் கடன் சுமை கூடும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு இடமாறுதல் ஏற்படலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய பணிகளால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், புதிய கிளை தொடங்கும் எண்ணத்தை தள்ளிப்போடுவது நல்லது. பங்குச்சந்தை வியாபாரம் பரபரப்பாக நடைபெறும். கலைஞர்களுக்கு புகழும் திறமையும் இருந்தாலும், பணப் பற்றாக்குறை அதிருப்தியைத் தரக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள். சகோதர வழியில் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக நடந்துகொள்வது பிரச்சினையை தவிர்க்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல தகவல் வந்துசேரும்.
பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும்.