மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2022 1:27 AM IST (Updated: 28 Oct 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

மிருகசீரிஷம் 3,4-ம் பாதங்கள்,திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்

கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

திங்கட்கிழமை பகல் 2.28 மணி முதல் புதன்கிழமை மாலை 4.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியுடன் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். செலவு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், பிறகு செய்ய நினைத்த வேலையை உயர் அதிகாரிகளின் விருப்பப்படி உடனே செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத்தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால், வேலைப்பளு கூடும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் வரலாம். கூட்டாளிகளில் ஒருவர் பிரிய நேரிடும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்பில் கவனம் செலுத்துவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்பு இருக்காது. பிள்ளைகளுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பரிகாரம்:- பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை சூட்டி வழிபாடு செய்தால் புகழும், பொருளும் தேடி வரும்.


Next Story