மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Nov 2022 1:21 AM IST (Updated: 4 Nov 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய வேலைகளில் தொய்வு ஏற்படக்கூடிய வாரம். நண்பர்கள் உங்கள் கண்களில் படாமல் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அவசரப்பட்டு செய்த வேலை ஒன்றில் பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் முக்கிய வேலை ஒன்றை விரைவாகச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபார அபிவிருத்தி ஏற்படும். பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற, சிறிது காலம் பொறுமையாக இருப்பது நல்லது. கலைஞர்கள், புதிய வாய்ப்பினைப் பெற தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். சகக்கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் இருக்கும். பிரச்சினைகளைச் சமாளிக்கப் புதிய கடன் வாங்க நேரிடும்.

பரிகாரம்:- முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபட்டால் பிரச்சினை தீரும்.


Next Story