மிதுனம் - வார பலன்கள்
உழைப்புக்கு அஞ்சாத மனம் படைத்த மிதுன ராசி அன்பர்களே!
உங்களுக்கு நன்மை தரக்கூடிய வாரம் இது. அரசு பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள், நன்மை பெறுவதுடன், ஒரு சிலர் பதவியில் ஏற்றம் காண்பர். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினை விலகும். பிரிந்த நண்பர்கள் தேடி வருவார்கள். தங்களுடன் பணி செய்யும் சக ஊழியரால் மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். புத்திர தோஷம் உள்ள தம்பதிகளுக்கு அந்தக் குறை நீங்கும். புதிய வீடு கட்டவோ, இடம் மாறவோ வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் சிறிய தேக்கம் உண்டாகும். இருப்பினும் கவலை கொள்ளத் தேவைஇல்லை.
பரிகாரம்: திங்கட்கிழமை விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்கினால் தொல்லைகள் அகலும்.