மிதுனம் - வார பலன்கள்
நேர்மையுடன் கண்ணியமாக பழகும் மிதுன ராசி அன்பர்களே!
திங்கள் மற்றும் செவ்வாய் சந்திராஷ்டமம் உள்ளதால், பழைய கடன் தொல்லை தலைதூக்கலாம். வரவு, செலவுகளைக் கூட சிறு தொல்லைக்கு இடையில்தான் சரிசெய்ய முடியும். புதிய விஷயங்களில் ஈடுபடும் முன் அதிக கவனம் தேவை.
அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர்களும், சமூகத் தொண்டு செய்பவர்களும் சில புதிய விஷயங்களில் தலையிட வேண்டி வரலாம். என்றாலும் நிதானத்துடன் சிந்தித்துச் செயல்படுங்கள். காவல்துறை பணியாளர்கள் புதிய பதவிகள் அல்லது விருப்பமான இடமாற்றம் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழில் செய்பவர்கள், தங்கள் துறைகளில் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியை மனதில் வைத்து செயல்படுங்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையலாம்.
பரிகாரம்:- வாரம் முழுவதும் சூரிய பகவானை வழிபாடு செய்து வந்தால், வாழ்வில் நன்மைகள் நடைபெறும்.