மிதுனம் - வார பலன்கள்
எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது. நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெறும். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தி வருவது நல்லது. உயர் அதிகாரிகள் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு பணி செய்தால், வேண்டிய சலுகைகள் கிடைக்கும்.
தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கலைஞர்கள், ஓரளவு உற்சாகமாக இயங்கக்கூடிய அளவில் புதிய ஒப்பந்தங்கள் சில அமையும்.
மாணவர்களின் கல்வி ஈடுபாடு சுறுசுறுப்பாக இருக்கும். பொருளாதார நிலை கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே இனிமையான சூழ்நிலை நிலவும்.
பரிகாரம்:- சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்கினால் இன்னல்கள் மறையும்.