மிதுனம் - வார பலன்கள்
30.12.2022 முதல் 5.1.2023 வரை
நண்பர்களை ஆதரிக்கும் குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் செயல்கள் சிலவற்றில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். செயல்களில் தேக்கம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துவதோடு, பொறுமையாக செயல்படுங்கள். வழக்கமான செயல்களில் இருந்த தொய்வு அகலும்.
சொந்தத் தொழிலில் புதிய நபர்களின் வருகை இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் பற்றி ஆலோசிப்பீர்கள். உதவியாளர்களின் பணி திருப்திகரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்றாக நடந்தாலும், எதிர்பார்க்கும் லாபம் இல்லாமல் போகலாம்.
குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு தொல்லைகள் தலைதூக்கலாம். கடன் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் தீவிர முயற்சியுடன் புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பார்கள். பங்குச்சந்தையில் அன்றாட நிலவரங்களை கவனிப்பது அவசியம்.
பரிகாரம்:- வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு வில்வ மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.