மிதுனம் - வார பலன்கள்
செய்யும் செயல்களில் உற்சாகம் காட்டும் மிதுன ராசி அன்பர்களே!
தளர்வடைந்த காரியங்களை முடிக்க சிலரது உதவியை நாட வேண்டி இருக்கலாம். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைகளில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து கொடுக்கும் சூழல் உருவாகும். சக நண்பர்களின் குடும்ப விஷயங்களில் வீணாக தலையிட்டு, வருத்தம் அடைய நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், நவீன கருவிகளைப் பயன்படுத்தி பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு, வியாபாரம் சுமாராக நடந்தாலும் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் பணப்பற்றாக்குறையால், கடன்பெற்று செலவுகளை சமாளிக்க நேரலாம். பெண்கள் வீட்டுப் பணிகளில் ஈடுபடும்போது கவனமாக செயல்படுங்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தம் பெற முயற்சிப்பார்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் சகல சவுபாக்கியமும் ஏற்படும்.