மிதுனம் - வார பலன்கள்
தெளிவான சிந்தனை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
திட்டமிட்டபடி பண வரவு வந்து உற்சாகமளிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும், சோர்வடையமாட்டீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கவனக்குறைவாகச் செய்த பணிக்காக, உயரதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். பேச்சுகளில் கவனம் தேவை.
சொந்தத்தொழில் செய்பவர்கள், பாதியில் விட்டிருந்த வேலையைச் செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளரின் திருப்திக்காக, இரவு-பகல் பார்க்காமல் பணியாற்றி வேலையை முடித்துக் கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்கு நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.
கலைஞர்கள் சிலர், வேலைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். உறவினர் விஷயத்தில் கவனம் அவசியம்.
வழிபாடு:- வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வந்த வினை அகலும்.