மிதுனம் - வார பலன்கள்
கம்பீரமான தோற்றம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
முயற்சியுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய நபர்களால் சில உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகம் மூலம் கடன் தொகை வந்துசேரும். அதைக் கொண்டு பாதியில் நின்றிருந்த வேலைகளைத் தொடருவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத நல்ல திருப்பங்களைச் சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் மூலம், பண வரவு அதிகரிக்கும். பரபரப்புடன் செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழில் அபிவிருத்தி குறித்து பங்குதாரர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பீர்கள். பங்குச்சந்தையில் புதிய நபர்களின் வருகையால் முதலீடு அதிகமாகும். கலைஞர்கள், பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். சிறிய கடன்களில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள். பெரியவர்களால் சில விஷயங்கள் சுமுகமாகும்.
பரிகாரம்:- துர்க்காதேவிக்கு வெள்ளிக்கிழமை சிவப்பு மலர் சூட்டி வழிபட்டு வர துன்பங்கள் விலகும்.