மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 Feb 2023 1:42 AM IST (Updated: 17 Feb 2023 1:43 AM IST)
t-max-icont-min-icon

நேர்மை மிக்க நெஞ்சம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

சனி மற்றும் ஞாயிறு அன்று சந்திராஷ்டமம் உள்ளதால், நெருங்கிய நண்பர்களால் சில தொல்லைகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூட வாய்ப்பு உண்டு. தீர்க்கப்படாமல் இருந்து வந்த பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல திருப்பம் ஏற்படும். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஒரு சிலர் குடும்பத்தோடு ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். நீண்ட காலமாக மனதில் நினைத்திருந்த காரியம் ஒன்று நிறைவேறி மகிழ்ச்சிப்படுத்தும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி நில்லுங்கள். பணம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள், சற்று கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் தீரும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story