மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Feb 2023 1:23 AM IST (Updated: 24 Feb 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

தர்ம சாஸ்திரத்தில் பற்றுள்ள மிதுன ராசி அன்பர்களே!

முன்னேற்றமான பலன்களைப் பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். இருப்பினும் ஓரிரு காரியங்களே வெற்றியாகும். தடைகள் வந்து தடுத்தாலும், அதைத் தாண்டிச் செல்ல முயற்சிப்பீர்கள். உத்தியோகம் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய நேரிடும். கனிவான பேச்சு உங்கள் கவலையைப் போக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், மூலப்பொருள் குறைவினால் தொல்லைகளை சந்திப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கூட்டுத்தொழில் சிறப்புடன் நடந்து வந்த போதிலும், லாபம் கொஞ்சம் குறையும். குடும்ப வாழ்வில் சிறுசிறு குறைகள் தோன்றி மறையும். கலைஞர்கள், பழைய பணிகளில் கவனம் செலுத்தினாலே வருவாய் ஈட்ட முடியும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் குறையும்.

பரிகாரம்:- வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு, வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story