மிதுனம் - வார பலன்கள்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் மிதுன ராசி அன்பர்களே!
தொலைபேசி மூலம் வரும் தகவல், உங்களுடைய நீண்டகால பிரச்சினையை தீர்க்கும். குடும்ப உறவுகள் இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பிரிந்து சென்ற உறவினர் ஒருவர் உதவி கேட்டு வரக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் செய்பவர்கள், தங்களது துறைகளில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள்.
அரசு வழியில் நன்மைகளும், தொழிலில் வருமானமும் வந்துசேரும். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வியாபாரிகள் ஓரளவு உற்சாகமாக காணப்படுவர். தீவிர முயற்சிகளால் கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் அனுசரணையான போக்கால், பெண்களுக்கு பெருமையும், நிம்மதியும் உண்டாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.