மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 March 2023 7:51 PM (Updated: 16 March 2023 7:52 PM)
t-max-icont-min-icon

பெரியோர்களிடம் பணிவு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை காலை 7.22 மணி முதல் ஞாயிறு காலை 9.40 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எடுத்த காரியங்கள் வெற்றிபெறுவதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தள்ளிப்போகும்.

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தொல்லை கொடுத்து வந்த சக ஊழியர், பணியிட மாற்றம் பெற்றுச் செல்ல வாய்ப்புண்டு. தேவையில்லாமல் வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம்.

பெண்களுக்கு எதிர்பாராத பரிசுகள், பதவி உயர்வுகள் தேடி வர வழி ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்றும் நிலை சிலருக்கு ஏற்படலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகளை எதிர்பார்த்து பணம் செலவு செய்ய வேண்டாம். அது வீண் விரயமாக ஆகக்கூடும். அதிக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டினால் நினைத்தது நிறைவேறும்.

1 More update

Next Story