மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 March 2023 1:22 AM IST (Updated: 24 March 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களை கலை அழகுடன் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!

தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றமான போக்கை காண முடியும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வந்தாலும், தொகை வசூலாவது கடினம்தான். யாருக்கும் அதிகமாக கடன் தராதீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்குகளில் கவனமாக இருந்தால், கூட்டாளிகளிடம் ஏற்படும் மனக்கசப்பைத் தவிர்க்க முடியும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். சகப் பணியாளர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இது. அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பொறுப்புகள் தேடி வரும். கலைஞர்கள், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே சில புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை, சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.

1 More update

Next Story