மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 April 2023 1:32 AM IST (Updated: 7 April 2023 1:33 AM IST)
t-max-icont-min-icon

சிந்தித்து சிறப்பான முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை பிற்பகல் 3.23 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு புதிய வாடிக்கையாளர் வருகையால் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருந்தாலும், வியாபாரம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் அவ்வப்போது இருக்கும். தந்தைவழி உறவுகளில் நடைபெறும் மங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரி வழி உறவுகள் மூலம் பெண்களுக்குள் சிறு மனத்தாங்கல் ஏற்படும். பெண்களுக்கு சேமிப்பு நல்ல வழியில் செலவழியும். கலைஞர்கள், சகக்கலைஞர் மூலம் புதிய வாய்ப்பினை பெறுவார்கள். அதனால் பொருளாதாரம் உயரும். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, புத பகவானுக்கு சுண்டல் நிவேதனம் செய்து நெய் தீபமிடுங்கள்.

1 More update

Next Story