மிதுனம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் பற்று கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
வெள்ளி முதல் சனிக்கிழமை மாலை 5.42 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் அதிக கவனம் தேவை. உறவினர்களும், நண்பர்களும் தக்க சமயத்தில் உதவக் காத்திருப்பார்கள். எதிர்பாராத பண வரவுகள் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்துசேரும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, அதிக வேலையும், அதன்மூலம் அதிக பணவரவும் இருக்கும். இரவு - பகல் ஓய்வின்றிப் பணிகளில் ஈடுபட்டு வேலைகளைச் செய்து கொடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செலவும் இருக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெற வழி ஏற்படும். பெண்கள் அதிக வேலைகளால் அல்லல்படுவார்கள். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து, புதிய ஒப்பந்தம் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு, துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.