மிதுனம் - வார பலன்கள்
உற்சாகத்துடன் உழைக்கும்மிதுன ராசி அன்பர்களே!
முயற்சியுடன் காரியங்களைச் செய்து வெற்றியான பலன்களை அடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டு. அலுவலகத்திலேயே பொறுப்பான வேலைகள் வந்துசேரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்களால் வேலைப்பளு கூடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாகலாம். வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். வயதானவர்களுக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தின் மூலம் பணவரவுகள் ஏற்பட்டு புதிய ஆபரணங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் பணமும், புகழும் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.